மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு அஜித் இப்படியொரு உதவி செய்தாரா!! அவரே பேட்டியில் சொன்ன உண்மை..
சினிமாத்துறையில் பலன் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்தும் தற்போது சீரியல் மற்றும் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து இந்தாம்மா ஏய் என்ற அவரது டயலாக் அனைவரையும் கவர்ந்திழுத்தது. இன்று காலை டப்பிங் பணியில் இருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் மாரிமுத்து.
அவரது மறைவுக்கு வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மறைவுக்கு முன் நடிகர் மாரிமுத்து அஜித் பற்றி பேசிய ஒரு விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்துடன் பல படங்களில் பணியாற்றி இருப்பதாகவும் அவருடன் நடந்த சம்பவத்தையும் பகிர்ந்து கொண்ட மாரிமுத்து, என் மகன் படிக்க கேட்காமலேயே பணம் கொடுத்து உதவினார் அஜித் என்று கூறியிருக்கிறார்.
“என் மகன் படிக்க கேட்காமலேயே பணம் கொடுத்து உதவியவர் அஜித்”
— AK (@iam_K_A) September 8, 2023
- Actor #Marimuthu #RIPMarimuthu #Ajithkumar #AK pic.twitter.com/D2DAuj1h6K