ரஜினி கையால் அடிவாங்க வேண்டும்.. நடிகர் அஜித்துக்கு இப்படி ஒரு ஆசையா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித், தனக்கு பிடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த பேட்டி தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
"எனக்கு நம்பர் 1, நம்பர் 2 இதிலெல்லாம் ஈடுபாடு இல்லை. அந்த எண்ணங்களும் மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியராக ரஜினி சாரை நான் பார்க்கிறேன். துரோணாச்சாரியாரின் அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் ஏகலைவன் போல் இருக்கவே ஆசைப்படுகிறேன். சூப்பர்ஸ்டாரை நான் தூரத்தில் இருந்துகொண்டே ரசித்தபடி, படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்".
"ரஜினி சார் நடிக்கவேண்டும், அவர் நடிக்கும் படத்தில் நான் வில்லனாக நடிக்கவேண்டும். அவர் கையால் நான் ஆதி வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ அன்று எனது சினிமா பயணம் முழுமையை அடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்". என கூறியுள்ளார்.
அஜித் அடுத்ததாக AK 64 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.