ஒரேவொரு படம் தான், சினிமாவே வேண்டாம் ஓடிய அஜித் பட நடிகை மானு.. தற்போதைய நிலை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் தன் படத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புவார். அப்படி அவருடன் நடித்த நடிகைகள் பல முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் அஜித்துடன் நடித்த ஒரே படத்திற்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் சினிமாவில் இருந்து விலகி போய்விட்டார் நடிகை மானு. காதல் மன்னன் படத்தில் கதாநாயகியாக தன்னுடைய 16 வயதில் நடித்திருந்தார் நடிகை மானு.
இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மானுவுக்கு நல்ல கேரியரை ஏற்படுத்தி தந்தது. பின் 16 வருடம் கழித்து என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது திருமணம் செய்து சிங்கபூரில் செட்டிலாகியுள்ள மானு நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிங்கபூரில் உடல் நிலைக்குறைப்பாட்டால் சிகிச்சை பெற்ற போது மானு தான் பல உதவிகளை செய்திருந்தார். தற்போது மானு தன் கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் இப்புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த குடும்ப புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.