வேண்டவே வேண்டாம்-னு ஒதுக்கிய தயாரிப்பாளர்!! 23 வருஷமாக பழிவாங்கும் அஜித் குமார்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார், மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் விரைவில் ஷூட்டிங் ஆர்ம்பமாகவுள்ளது. அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி விடாமுயற்சி என்ற டைட்டிலை படக்குழுவினர் அறிவித்தனர்.
மேலும் அஜித் பற்றி பலர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்தும் இருக்கிறார்கள். அப்படி அஜித் - தயாரிபபாளர் கலைப்புலி தானுடன் இணைந்து பணியாற்றாமல் இருக்க காரணம் என்ன என்பதை வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துள்ளார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித் கால்ஷீட் கொடுத்து நடிக்க இருந்தபோது கார் விபத்தாகி நடக்க முடியாமல் வீல் சேரில் செல்லும் நிலைமை ஏற்பட்டது. அப்போது கமிட்டாகிய தானு படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க வேண்டும் என்று அஜித்திடம் கூறப்பட்டது.
அப்போது ஒரு வாரம் டைம் கேட்டுள்ளார் அஜித். அதன்பின் படத்தில் இருந்து அஜித்தை தூக்கவேண்டும் என்ற முடிவிற்கே தானு வந்துள்ளார். இதனை அறிந்த அஜித், வீல் சேரோடு தானு அவர்களில் அலுவலகத்திற்கு சென்று ஒரு வாரம் டைம் கேட்டிருக்கிறார்.
அவர் சொன்னது போல் படத்தின் ஷூட்டிற்காக ரெடியாகி சென்றிருக்கிறார் அஜித்குமார். அப்படம் வெளியானதில் இருந்து கலைப்புலி தானு தயாரிப்பில் இன்று வரை அஜித் நடிக்கவில்லையாம்.
ஆனால், இது ஒரு புறம் இருந்தாலும் கலைப்புலி தானுவின் மனைவி மறைவுக்கு முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார் அஜித்குமார். இதுபோல் பல தயாரிப்பாளர்களிடம் அஜித் தன் கோபத்தை காட்டியிருப்பதாக அந்தணன் கூறியுள்ளார்.
