ரஜினி கையால் அடிவாங்க வேண்டும்!! எனக்கு கவலை இல்லை.. AK அதிர்ச்சி பேட்டி
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் தல என கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் வெளிவந்தன.
அஜித் கடந்த சில வருடங்களாக சினிமா சார்ந்த எந்த ப்ரோமோஷன் விழாவிலும் கலந்துகொள்வது இல்லை. ஆனால், மங்காத்தா படத்தின்போது Print மீடியாவுக்கு பேட்டிகள் கொடுத்துள்ளார்.
அப்போது ரஜினிகாந்த் குறித்து அஜித் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிர்ச்சி பேட்டி
அதில், "எனக்கு நம்பர் 1, நம்பர் 2 என்பதில் ஈடுபாடு இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியராக ரஜினி சாரை நான் பார்க்கிறேன். துரோணாச்சாரியாரின் அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை.
நான் ஏகலைவன் போல் இருக்கவே ஆசைப்படுகிறேன். சூப்பர்ஸ்டாரை நான் தூரத்தில் இருந்துகொண்டே ரசித்தபடி, படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். ரஜினி சார் நடிக்கும் படத்தில் நான் வில்லனாக நடிக்கவேண்டும்.
அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும், இது எப்போது நடக்கிறதோ அன்று எனது சினிமா பயணம் முழுமை அடையும். இது என் லட்சியம். மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்"என அஜித் கூறியுள்ளார்.
அஜித் Ringtone " Hukum" ... அவர் அப்போல இருந்தே ரஜினிய ரசிச்சுட்டு தான் இருக்கார்.
— 💥Mahesh💥 (@Bourbon_Mahesh3) September 1, 2025
Kollywood ல இருக்குற நிறைய பேரு இருக்கலாம் ஆனா எல்லாருக்குள்ளயும் ரஜினி-ன்னு ஒரு Character இருப்பான் 😎👑🔥 pic.twitter.com/dTjF1TOkin