சூப்பர் ஃபிகர்... திருமணத்திற்கு பின் அந்த நடிகையை வர்ணித்து தள்ளிய அஜித் குமார்..
தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடிகட்டு, பகவதி, சாமி, அன்பே சிவம், அருள், திருப்பாச்சி, ஐயா, திருப்பதி, நாடோடிகள் 2, சாயம், மெய்பட பேசு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வந்தவர் நடிகர் பெஞ்சமின்.

நடிகர் விஜய், அஜித், விக்ரம் படங்களில் ஒருசில காட்சிகளில் நடித்து பிரபலமான பெஞ்சமின், சமீபத்தில் மரணமடைந்த போண்டா மணிக்கும் கேப்டன் விஜயகாந்த் மறைவு சமயத்தில் எமோஷ்னலாக பேசியிருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் விஜய், ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார்.
ஆனால் அஜித் சார், விஜய்க்கு எதிர்மாறானவர். திருப்பதி படத்தின் போது நாங்கள் 4 நண்பர்கள். ஷூட்டிங்கிற்கு வந்தால் கேரவனுக்கு அஜித் செல்லாமல் எங்களிடம் தான் வருவார். நாலு சேர் போட்டு உட்கார்ந்துட்டு, வீட்டில் இருந்து பிரியாணி சமைத்து கொண்டு வந்திருக்கிறேன், எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று சொல்லுவார்.

தினமும் சாப்பாடு எடுத்து வருவார். கலகலன்னு காமெடி பண்ணிட்டே இருப்பார். ஒருமுறை படத்தின் ஹீரோயின் (நடிகை சதா) வந்திருப்பதை பார்த்து பெஞ்சமின் சூப்பர் ஃபிகர் வருது பாரு, என்ன சார் என்று கூச்சமுடன் நான் கேட்டதற்கு, ஃபிகர் தானே அவங்க என்று கூறுவார். இதை கேட்ட ரசிகர்கள் அஜித்தை கண்டபடி விமர்சித்து வருகிறார்கள்.