நான் என்ன படம் பண்ணணும்னு நீங்க சொல்லாதீங்க! வைரலகும் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

Ajith Kumar Actors
By Edward May 30, 2022 09:57 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற பெயரோடு உச்ச இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித் குமார். வலிமை படத்திற்கு பிறகு தற்போது எச் வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அவ்வப்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் மேனேஜராக பணியாற்றும் சுரேஷ் சந்திரா அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு தம்பதியினர் கழுதையை எப்படி நடத்த வேண்டும் என்பதை வைத்து நான்கு விதத்தில் கருத்தினை கூறுவது போல் இருக்கிறது.

கழுதையை நடக்க வைத்து தம்பதி சென்றால், முட்டாள்கள் கழுதையை வைத்துக்கொண்டு நடந்து போகிறார்கள் என்று கூறுவார்கள். அதுவே மேலே உட்கார்ந்து சென்றால் கழுதையை கொடுமைப்படுத்திகிறார்கள் என்று கூறுவார்கள்.

மனைவியை உட்கார வைத்து கணவர் சென்றால் ஆணை கோழையாக பார்ப்பார்கள். அதே ஆண் உட்கார்ந்து பெண் நடந்தால் மனைவியை கொடுமைப்படுத்துகிறான் என்று கூறுவார்கள். அதுவும் இல்லை என்றால் கழுதையை தூக்கி சென்றால், அறிவில்லாவர்கள் என்றும் கூறுவார்கள்.

இப்படி நான்கைந்து பேர் கூறும் கருத்தை கொண்டு நாம் எப்படி நடந்து கொள்வதை முடிவு செய்கிறோம். நம்ம என்ன செஞ்சாலும் நாலு பேரு நான்கு விதமாக தான் பேசுவார்கள் என்று மறைமுகமாக அஜித் கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு ரசிகர்களும் அஜித்தை வெறுப்பவர்களுக்கும் இடையில் சமுகவலைத்தளத்தில் வாக்குவாதமே இதனால் நடந்து வருகிறது.