குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்!! எப்படி இருக்கு தெரியுமா..
ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. படத்தை பிஸினஸ் செய்வதற்காக, 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் கட் செய்து திரையுலகில் உள்ள முக்கிய நபர்களுக்கு திரையிடப்படும்.
அப்படி குட் பேட் அக்லி படத்தையும் படக்குழு திரையிட்டுள்ளனர். அப்போது படத்தை பார்த்து முக்கிய நபர்கள் மிரண்டு போய்யுள்ளனர். மேலும் படம் தரமாக வந்துள்ளது என விமர்சனத்தை தெரிவித்தனர்.
திருச்சி ஸ்ரீதர்
இந்நிலையில் திருச்சி ஸ்ரீதர் அளித்த பேட்டியொன்றில், மலேசியவில், சமீபத்தில் நண்பர் ஒருவர் குட் பேட் அக்லி படத்தின் சென்சார் காட்சியை பார்த்தார்.
படம், அஜித் குமார் நடித்து வெளியான சிட்டிசன், தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்களின் கலவையாக இருப்பதாகவும் ரசிகர்களை மிகபெரியளவில் திருப்திப்படுத்தும் என்றும் படம் வெளியானால் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை உறுதி என்றும் தன்னிடம் அவர் கூறியதாக திருச்சி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
மேலும், அஜித் குமார் தோல்விப்படங்களை கொடுக்காமல் அவர் வெற்றிப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் திருச்சி ஸ்ரீதர் பேட்டியில் கூறியிருக்கிறார்.