ரசிகரை கலாய்த்த அஜித்.. வைரலாகும் வீடியோவை பாருங்க

Ajith Kumar Trending Videos Tamil Actors
By Bhavya Feb 10, 2025 07:30 AM GMT
Report

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து, அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் நடிப்பதை தொடர்ந்து அஜித் அவருக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

ரசிகரை கலாய்த்த அஜித்.. வைரலாகும் வீடியோவை பாருங்க | Ajith Make Fun On Fans

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், தனது ரசிகர் ஒருவரை அஜித் கலாய்க்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், ரசிகர் ஒருவர் கையில் குழந்தையுடன் அஜித் குமார் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். அப்போது, அங்கு இருக்கும் அனைவரும் அந்த குழந்தையிடம் "அழக்கூடாது அழக்கூடாது அஜித் அங்கிள்" என்று கூற.

அதற்கு அஜித், "நீங்களே அழு வச்சுருவீங்க போல" என்று காமெடியாக கமெண்ட் செய்து உள்ளார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,