லைகாவுக்கு IT Raid கொடுத்த பெரிய அடி!! விடாமுயற்சி-க்கு எண்ட் கார்ட் போட்டாரா அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்காவும் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் துணிவு படத்திற்கு பின் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கப்போகும் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படத்தின் டைட்டில் வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன் லைகா நிறுவனத்தை சேர்ந்த 8க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஐடி ரைடால் லைகா நிறுவனம் தயாரித்த படங்களின் வேலைகள் நின்று போனது.
இந்நிலையில் நடிகர் அஜித் லைகா நிறுவனத்தில் ஐடி ரைட் நடைபெற்றதால் கொஞ்சம் அப்செட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதனால் அஜித் விடாமுயற்சி படத்தில் தொடர்வதே கேள்விக்குறியாக வைத்துள்ளாராம்.
ஜூன் இரண்டாம் வாரம் வரை இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிச்சென்றுள்ளதாம். இது பொய்யா உண்மையா என்பது அஜித் ஷூட்டிங்-ஐ ஆரம்பித்தால் தான் தெரியவரும்.
மேலும் லைகாவுக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் இடையில் ஒருசில வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி நீண்டகாலத்திற்கு மேல் தொடர்முடியாது என்று வலைப்பேச்சு அந்தணன் மற்றும் பிஸ்மி தெரிவித்துள்ளார்.