காதல் திருமணமே வேண்டாம்? அஜித் - ஷாலினி திருமண விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நடிகர்..

valimai shalini ajithkumar rameshkhanna
By Edward Mar 23, 2022 04:15 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் வலிமை படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அதன் தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்.

வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு மகன் ஆத்விக் பிறந்தநாள் பார்ட்டியில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. இதைதொடர்ந்து அஜித் - ஷாலினியின் ரொமாண்ட்டிக் புகைப்படம் வெளியாகி வைரலாகியது.

இது ஒரு பக்கம் இருக்க அஜித்- ஷாலினி திருமணம் குறித்து சில விஷயங்களை நடிகர் ரமேஷ் கண்ணா கூறிய செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. அமர்க்களம் படத்தின் போது அஜித்தும் ஷாலினியும் மனம் ஒற்றுப்போக காதல் ஏற்பட்டு நெருக்கம் காட்டினர்.

இதையறிந்த ரமேஷ் கண்ணா அஜித்திடம் சென்று அட்வைஸ் கூறியிருந்தார். சினிமா வட்டாரத்தில் இருவரும் பணியாற்றி திருமணம் செய்தால் சில கசப்பான சம்பவங்களும் யாராவது அதை விட்டுக்கொடுக்கவும் நேரும்.

அப்படி நடிகையை காதல் திருமணம் செய்ய வேண்டாம் என்று அஜித்திடம் பல முறை ரமேஷ் கண்ணா கூறியிருக்கிறாராம். ஆனால் அஜித் ஷாலினி மீதிருந்த அதீத காதலால் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஷாலினி சினிமாவை விட்டுக்கொடுக்க குடும்பத்தினை பார்க்க ஆரம்பித்துவிட்டார். இதேபோல் சூர்யா - ஜோதிகா காதலுக்கு ரமேஷ் கண்ணா தூதுவாகவும் இருந்துள்ளார் என்று சமீபத்திய பேட்டியில் கூட கூறியிருந்தார்.

ஜோதிகா சூர்யாவுக்கு அந்த வேலை பார்த்த நடிகர்? கமல் படத்தில் நடந்த கூத்து..