ஜோதிகா சூர்யாவுக்கு அந்த வேலை பார்த்த நடிகர்? கமல் படத்தில் நடந்த கூத்து..
தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக இருந்து பின் ரியல் ஜோடியாக மாறியவர்கள் முக்கிய தமபதியினராக இருப்பவர்கள் சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போதில் இருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இதையடுத்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து வந்தனர். இதையடுத்து இருவரும் 2006ல் திருமணம் செய்தனர். இந்நிலையில் அவர்களின் காதல் ஏற்பட்ட விஷயம் பற்றி நடிகர் ரமேஷ் கண்ணா பகிர்ந்துள்ளார்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் போது ஊட்டியில் கமல், ஜோதிகாவின் தெனாலி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இரு படத்திலும் நான் நடித்திருந்த போது காலை மாலை என மாறி மாறி ஷூட்டிங்கிற்கு சென்றேன்.
அப்போது நடிகை ஜோதிகாவை காதலித்து வந்த சூர்யா என்னிடம் அவரை கேட்டதாக சொல்லுங்கள் என்று எனக்கு தூது விடுவார். நானும் ஜோதிகாவிடம் கூறுவேன்.
இப்படியே அவர்களின் காதல் வாழ்க்கை நடந்தது என்னால் தான் என்று குறிப்பிட்டார். இதனால் சூர்யா இன்று வரை தெய்வம் மச்சான் தான் என்னை கூப்பிடுவார் என தெரிவித்தார் ரமேஷ் கண்ணா.