தேர்தலின் போது அஜித்-சிம்பு சொன்னதாக பரவிய தவறான கருத்து, ஏன்யா இப்படி பண்றீங்க
Ajith Kumar
Silambarasan
By Tony
அஜித்-சிம்பு
தமிழகத்தில் நேற்று பிரமாண்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு பெரியளவில் வாக்குபதிவு நடக்க, பல இளைஞர்கள் இந்த முறை வாக்களித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அஜித் நேற்று மாற்றம் தேவையில்லை என்று சொன்னதாக ஒரு செய்தி பரவியது, இதை தொடர்ந்து ஸ்டாலின் அவர்களிடம் கூட, அஜித் இப்படி சொன்னதாக கூற, அவரும் அஜித் நல்ல கருத்து தானே சொன்னார் என கூறினார்.
மாற்றம் எதற்கு?
இதை தொடர்ந்து சிம்பு மாற்றம் ஏன் வேண்டும், இந்த ஆட்சியே நன்றாக இருக்கிறதே என கூறியதாக ஒரு செய்தி பரவியது, இது இரண்டு குறித்தும் விசாரிக்கையில் அஜித் அப்படி கூறவே இல்லை என்பது தெரிய வந்தது. இதை அஜித்தின் மேனஜேரும், அஜித் அப்படி எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை என உறுதியளித்தார்.
சிம்பு சொன்னதாக பரவிய வீடியோ 2016-ம் ஆண்டு தேர்தல் போது சொன்ன வீடியோ என்று தெரிய வந்துள்ளது.