அஜித் ஹீரா மட்டுமில்லை, அதற்கு முன்பே வேறு ஒரு ஹீரோயினையும் காதலித்தாராம், பிரபலம் சொன்ன தகவல்
அஜித்-ஹீரா
அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த குட் பேட் அக்லீ படம் உலகம் முழுவதும் ரூ 270 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் அஜித்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது, அவர் விருது வாங்கும் நாள் அன்றே, அஜித்-ஹீரா காதல் குறித்த ஒரு பதிவு வைரல் ஆக தொடங்கியது.
அஜித்தின் மிஸ்டர் க்ளீன் இமேஜை உடைக்கவே இதுபோன்ற மோசமான விஷயங்களை செய்ததாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறினார்.
அதை தொடர்ந்து பத்திரிகையாளர் பிஸ்மி, அஜித் குறித்து பல அரியாத விஷயங்களை பகிர்ந்துள்ளார், அதில் அஜித்திற்கு ஹீரா மீது காதல் இருந்ததை முதன் முதலாக இந்த உலகிற்கு சொன்னது நான் தான்.
அது மட்டுமில்லை, ஹீராவிற்கு முன்பு அஜித் நடிகை சுவாதியையும் காதலித்தார், அந்த காதலும் கைக்கூடாமல் போனதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.