அப்போ வலிமை வரவே வராத! அஜித் பேச்சை கேட்காத போனிகபூர்!

valimai ajithkumar hvinoth boneykapoor
By Edward Jan 07, 2022 12:45 PM GMT
Report

தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் பொங்கலுக்கு எதிர்ப்பார்த்த படம் வலிமை. நடிகை அஜித்குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியாக இருந்தது. கொரோனா லாக்டவுன் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் ஞாயிறு முழூஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதனால் பல படங்களின் வெளியீட்டை தள்ளி வைத்ததை போல் படத்தின் தயாரிப்பாளர் நேற்று வலிமை வெளியீடு தள்ளி வைத்ததாக அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் வலிமை படத்தை வெளியிட்டே ஆகவேண்டும் என்று அஜித், போனி கபூர் முடிவில் இருந்துள்ளனர்.

அஜித் போனி கபூரிடம் லாக்டவுனில் 50 சதவீத தியேட்டர் அனுமதியில் வெளியிட ரசிகர்களுக்காக கேட்டுள்ளாராம். ஆனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் பலர் போனி கபூரை சந்தித்து வெளியிட வேண்டாம் என்று கேட்டுள்ளனர். அதனால் தான் போனி கபூர் அஜித் பேச்சை கேட்காமல் இப்படி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இதுபற்றி பலர் கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டும் வருகிறார்கள்.