தயாரிப்பாளரை ஏமாற்றிய விஜய்-அஜித்? ரஜினி கமலே வந்தாங்களே!
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராகவும் பினான்சியராகவும் இருந்து வருபவர் மதுரை அன்பு செழியன். சமீபத்தில் அவரது மகள் சுஷ்மிதாவிற்கு சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் ராஜேந்திரன் ஐஏஎஸின் மகன் சரணுக்கும் திருமணம் நடைபெற்றது.
ரஜினி, கமல், பிரபு, சிவகாரத்திகேயன், சூர்யா, அருண்விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து கூறினார்கள். ஆனால் நடிகர் விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் வராமல் இருந்துள்ளனர். விஜய்யை தான் அன்பு செழியன் எதிர்ப்பார்த்திருந்தாராம்.
விஜய்யின் நெருங்கி பழகி வந்த அன்பு செழியன் மகள் திருமணத்திற்கு வரவில்லை. மேலும் அஜித்தும் வரவில்லையாம். ஏற்கனவே நான் கடவுள் படத்தின் போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் தான் அஜித் வரவில்லை என்றும்,
அஜித்தை அழைக்க அன்பு செழியன் முயற்சி செய்தும் அப்பாய்ட்மெண்ட் கொடுக்கவில்லையாம். தனுஷிற்கு 40 கோடி ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார் அன்பு செழியன்.