AK 62 படத்தில் இருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? அஜித் போட்ட மாஸ்டர் பிளான்

Ajith Kumar Vignesh Shivan
By Dhiviyarajan Jan 27, 2023 04:14 PM GMT
Report

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் விருந்தாக ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.

இருப்பினும் அஜித்தின் துணிவு படத்தை காட்டிலும் விஜய்யின் வாரிசு படம் தான் வசூலில் டாப்பில் உள்ளது. இதேபோல இந்த வருடம் தீபாவளிக்கு அஜித் படமும், விஜய் படம் மீண்டும் மோத வாய்ப்புள்ளதாக தகவல் ஒன்று வெளியானது.

AK 62 படத்தில் இருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? அஜித் போட்ட மாஸ்டர் பிளான் | Ak 62 Director Vignesh Shivan Out From The Project

புதிய கூட்டணியா

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அதை போல Ak 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் Ak 62 படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகுவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. 

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக பிரஷாந்த் நீல் அல்லது விஷ்ணு வர்த்தன் இயக்க இருப்பதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்பவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவல் உண்மையா என்பது பற்றி அஜித் தரப்பு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.