இது AI இல்லை ஒரிஜினல் தான்!! சாய் பல்லவி வெளியிட்ட வீக்கெண்ட் வீடியோ...
சாய் பல்லவி
நடன கலைஞராக தனது பயணத்தை தொடங்கி பின் நடிகையாக களமிறங்கியவர் தான் சாய் பல்லவி. மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
கடைசியாக சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலக்கியது.
தற்போது பல படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, தன்னுடைய தங்கை பூஜா கண்ணனுடன் கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.
கடந்த ஆண்டு சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு படுகன் இன முறைப்படி பிரமாண்ட முறைப்படி திருமணம் நடைப்பெற்றது.
சமீபத்தில் தன் தங்கையுடன் நீச்சல் ஆடையணிந்து எடுத்த சாய் பல்லவியின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.
தற்போது சாய் பல்லவி தன் தங்கையுடன் அவுட்டிங் சென்றபோது எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் இந்த புகைப்படங்கள் எல்லாம் ஒரிஜினல் தான் AI கிடையாது என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.