நடிகர் அல்லு அர்ஜுன் கைது.. ஜாமீன் கிடைப்பது கூட கஷ்டம்..
புஷ்பா 2
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 படம் ரிலீஸாகி 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறார். இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் பார்க்க சென்றுள்ளார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா வந்ததால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் சிக்கி உயிரிழ்ந்தார்.
இந்த சம்பவம் பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திரையரங்க உரிமையாளர், மேனேஜர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டும் அல்லு அர்ஜுன் மீது போலிசார் வழக்கு பதிவும் செய்தனர்.
இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் இதற்கு மன்னிப்பும் கேட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் அல்லு அர்ஜுன் மனுதாக்கல் செய்தார்.
அல்லு அர்ஜுன் கைது
இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு போலிசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். தெரிந்தே மரணத்தை விளைவித்தல், திட்டமிட்டு கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்துள்ளனர்.
ஜாமீன் வழங்க முடியாத இந்த சம்பவம் தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.