ஓ நீ அப்படி சொல்றியா! தமிழர்களுக்கு எதிரான படமா புஷ்பா..

samantha tollywood pushpa alluarjun rashmikamandanna
By Edward Dec 14, 2021 12:55 PM GMT
Report

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஆக்டர் என்று கூறும் அளவிற்கு முன்னணி நடிகராக இருந்து அனைத்து வித ரசிகர்களை தன் நடனம், நடிப்பு, சண்டை போன்றவற்றால் ஈர்த்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்து 17ல் வெளியாகவுள்ள படம் புஷ்பா.

ரஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்து இப்படத்தின் சமீபத்தில் பிரஸ் மீட்டிங் நடந்துள்ளது. அதில் பல கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்த அல்லு அர்ஜுன், புஷ்பா படம் தமிழர்களுக்கு எதிரானதா என்றதற்கு பதிலளித்துள்ளார்.

சந்தனம் கடத்தல் படமாக புஷ்பா என்ற கதாபாத்திரம் தான் கதையாக இருக்கும். இதில் ஆந்திரா தமிழ்நாடு பார்டர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சந்தன கடத்தல் படமாக இருக்கும். அனைத்து ரசிகர்களுக்கும் புஷ்பாவை பிடிக்கும், இதனால் தமிழருக்கு எதிரான படமாக இருக்காது நான் உங்களில் ஒருவன் தான் என்றும் கூறியுள்ளார்.