பொது இடத்தில் இப்படி பண்ணக்கூடாது! அல்லுஅர்ஜுனால் அசிங்கப்பட்ட விஜே அஞ்சனா..
தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஆக்டர் என்று பேர் போனவர் நடிகர் அல்லு அர்ஜுன். தன் ஸ்டைலிஸ் ஆக்டிங்கை விட்டுவிட்டு முரட்டு ஆளாக சந்த கடத்தல் சம்மந்தப்பட்ட புஷ்பா என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படம் வெளியானது.
அல்லுஅர்ஜுன், ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த இப்படத்தில் நடிகை சமந்தா ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டது பெரிய மார்க்கெட்டாக இருந்துள்ளது. இப்படம் இதுவரை 250 கோடி வசூலை பெற்றது என்று பலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அனைத்து மொழிகளிலும் வெற்றி விழா நிகழ்ச்சி நடந்து வருகிறது. சென்னையில் நேற்று வெற்றி விழா நிகழ்ச்சியை விஜே அஞ்சனா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் மேடையில் அல்லு அர்ஜுன் பற்றி பேசிய அஞ்சனா, விசிலடித்தபடி நீங்கள் இரு ஸ்டெப்ஸ் ஆடியே ஆகனும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் அல்லு அர்ஜுன் முடியாது என்று கூறியதுடன் மேடையை விட்டு இறங்கி அரங்கத்தில் இருந்தே புறப்பட்டு சென்றுள்ளார். இது மேடையில் சில சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் நிகழ்ச்சி திட்டமிட்டதை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மிகவும் கலைப்பாகி இருந்த அல்லுஅர்ஜுன் சிரித்த முகத்துடன் தான் சென்றார் என்று விஜே அஞ்சனா தெரிவித்துள்ளார்.