தலைக்கால் புரியாமல் கணவருடன் ஆட்டம்!1 காலை உடைத்து மருத்துவமனையில் சீரியல் நடிகை ஆலியா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவுடன் கெமிஸ்ட்ரி அதிகரித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அதன்பின் அவருடன் காதல் ஏற்பட்டு குடும்பத்திற்கு எதிர்ப்பை மீறி சஞ்சீவ்-ஐ திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் உள்ளது.
தற்போது ஆலியா மானசா சன் டிவில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.
கால் முறிவு
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் காலில் அடிபட்டு பெரிய கட்டு போட்டபடி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், " நான் எதிர்பார்க்காத ஒன்று என் வாழ்க்கையில் நடந்து விட்டது. எனக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். என்னால் நடக்க முடியவில்லை ஆனால் தற்போது உடல் நிலை முன்னேறி வருகிறது.
இந்த விபத்தால் தான் என் கணவர் என்னை எவ்ளோ அன்பு செய்கிறார் என புரிந்து கொள்ள முடிந்தது" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.