கணவருடன் விவாகரத்து.. பழி வாங்காமல் விடமாட்டேன்!! முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஆலியா மானசா..
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரஜினி ராணி சீரியலுக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்தனர். இந்த தொடரில் நடித்த நாயகன் சஞ்சீவும், நாயகி ஆலியா மானசாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியருக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் அளித்த நேர்கணல் ஒன்றில் கலந்து கொண்ட பேசிய ஆலியா மானசா, "நான் சீரியலில் வேறு நடிகருடன் ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளை நடித்ததை பார்த்து என் கணவர், 'என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீரியல்ல' என்று கேட்பார். அப்படியே ஒரு லுக் விடுவார். மற்ற கணவர் போல தான் என் கணவரும். அவருக்கும் பொசசிவ் இருக்கும்".
"இவரை போன்று கணவர் கிடைக்க நான் தான் அதிர்ஷட்சாலி. எனக்கும், என்னுடைய கணவருக்கும் இடையே சண்டை வருகிறது என்றால் நான் தான் தவறு செய்து இருப்பேன். 10 நிமிடம் கழித்து தான் அது எனக்கே தெரியும்" என்று ஆலியா மனசா கூறியிருந்தார். இந்நிலையில், ஆலியா - சஞ்சீவ் இருவரும் இணைந்து சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை பகிர்வதில்லை என்றும் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.
இதை கேள்விப்படட ஆலியா சரியான பதிலடியை கொடுத்திருக்கிறார். "எங்களை பற்றி இந்த மாதிரியான விவாகரத்து செய்யப் போகிறோம் என்ற செய்திகளை பார்க்கும் போது எங்களுக்கு சிரிப்பு தான் வரும். பெரிதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்க போகிறது கிடையாது. அதேபோல் சில ஏமாற்றங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆரம்பத்தில் கூடவே இருந்து சிலர் அதிகமாக ஏமாற்றுவதை பார்த்து கோபப்பட்டு இருக்கிறேன். பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் ஆரம்பத்தில் வந்தது. தற்போது அதை நினைக்கும் போது அந்த சிந்தனை எல்லாம் வருவதில்லை என்று பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகை ஆலியா மானசா.
You May Like This Video