உருகுலைந்து போன உடல்!! மார்பக புற்றுநோயால் மரணித்த நடிகை ஜெய வாகினி..

Breast Cancer Indian Actress Death Tamil Actress Actress
By Jai May 20, 2026 07:45 AM GMT
Report

ஜெய வாகினி

தமிழ் சினிமாவில் அரசியல் நிலையை நையாண்டியை மிகவும் துணிச்சலாக பேசிய படம் தான் அமைதிப்படை. இப்படத்தின் சத்யராஜ், மணிவண்ணன் நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்படத்தில் மணிவண்ணன் காதலி ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜெய வாகினி. ஒரே ஒரு சீனில் நடித்தாலும் பலரையும் ஈர்த்த வாகினியின் கண்ணீர் கதை பலரையும் உருக வைத்துள்ளது.

உருகுலைந்து போன உடல்!! மார்பக புற்றுநோயால் மரணித்த நடிகை ஜெய வாகினி.. | Amaidhipadai Actress Jaya Vagini Tearful Store

1972ல் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்த ஜெய வாகினியின் இயற்பெயர் பத்மா விஸ்வரி. சினிமாவிற்காக அந்த பெயரை மாற்றிக்கொண்டார்.

சின்னத்திரை மூலம் கலைப்பயணத்தை தொடங்கிய வாகினி, தெலுங்கு தொடர்களில் வலுவான வில்லி ரோலிலும் குணச்சித்திர ரோலிலும் நடித்து வந்தார்.

தமிழில் அவ்வளவாக வாய்ப்பில்லாக தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர், கடைசியாக 2019ல் வெளியான ரகுபதி வெங்கையா நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் வி கே நரேஷுடன் இணைந்து நடித்தார்.

உருகுலைந்து போன உடல்!! மார்பக புற்றுநோயால் மரணித்த நடிகை ஜெய வாகினி.. | Amaidhipadai Actress Jaya Vagini Tearful Store

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு வருமானமும் இல்லை, கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் கடைசி படத்தில் மிகவும் வேதனைகளை அனுபவித்து வந்த ஜெய மோகினியின் புகைப்படத்தை அவரது தோழி ஒருவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

உருகுலைந்து போன உடல்!! மார்பக புற்றுநோயால் மரணித்த நடிகை ஜெய வாகினி.. | Amaidhipadai Actress Jaya Vagini Tearful Store

மொட்டை தலையுடன், உடல் மெலிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தான் அவர் பகிர்ந்திருந்தார். ஆனால் பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குள் ஜெய வாகினி, 2026 பிப்ரவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். சினிமாவின் மூலம் நம்மை மகிழ்வித்த ஜெய வாகினியின் மறைவு பலரையும் கலங்க வைத்தது.