ரூ 1000 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை சந்தித்த சூப்பர் கேர்ள், இதுவுமா
Box office
By Karthick Raja
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அதிலும் சமீப காலமாக ஹீரோயின்களை மையப்படுத்தி பல சூப்பர் ஹீரோயின்ஸ் படங்கள் வருகிறது. அந்த வகையில் சூப்பர் மேன் படத்தின் அடுத்த பாகமாக சூப்பர் கேர்ள் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.

இந்த படம் 175 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த படம் மொத்தமாகவே 150 மில்லியன் டாலர் வசூல் செய்தாலே ஆச்சரியம் தான், அதனால் இந்திய மதிப்பில் ரூ 1000 கோடி வரை இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் மேன் படமே பெரியளவில் ஹிட் ஆகாத நிலையில் தற்போது சூப்பர் கேர்ள் நஷ்டம் டிசி யுனிவர்ஸை அதிர்ச்சியாக்கியுள்ளது.