இரண்டாவது குழந்தையுடன் நடிகை அமலாபால்.. வைரல் வீடியோ
அமலாபால்
பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால்.
இப்படத்தின் வெற்றியால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குநர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
அதன் பின், ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு இலை என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.
வீடியோ
இந்நிலையில், அமலாபால் கணவர் வாங்கி கொடுத்த புதிய காரில் இருந்து இறங்கி அவரது குழந்தையை பெற்று கொள்ளும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதன் கீழ் கேப்ஷனாக முதலில் பேபி அடுத்து தான் பேப் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.