பிரபல நடிகையுடன் தொடர்பில் இருந்தாரா நாகர்ஜுனா.. மனைவி அமலா கூறிய உண்மை

Amala Tabu Nagarjuna
By Kathick Jun 14, 2025 02:27 AM GMT
Report

தெலுங்கு திரையுலகம் மூலம் இந்தியளவில் புகழ்பெற்ற நடிகராக உயர்ந்தவர் நாகர்ஜுனா. இவர் நடிப்பில் அடுத்ததாக குபேரா படம் வெளிவரவுள்ளது. மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

1984ம் ஆண்டு லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட நாகர்ஜுனா, பின் 1990ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின் நடிகை அமலாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

பிரபல நடிகையுடன் தொடர்பில் இருந்தாரா நாகர்ஜுனா.. மனைவி அமலா கூறிய உண்மை | Amala Talk About Nagarjuna Tabu Controversy

பிரபல பாலிவுட் நடிகை தபு உடன் நடிகர் நாகர்ஜுனா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் நடிகை தபு உடன் தொடர்பில் நாகர்ஜுனா இருக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டது.

இதுகுறித்து அமலாவே அந்த சமயத்தில் பதிலடி கொடுத்துள்ளார். "என் கணவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தபு எனக்கு நெருக்கமானவர் தான். அவர் எப்போது ஹைதராபாத் வந்தாலும் எங்கள் குடும்பத்துடன் தான் தங்குகிறார்" என கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

பிரபல நடிகையுடன் தொடர்பில் இருந்தாரா நாகர்ஜுனா.. மனைவி அமலா கூறிய உண்மை | Amala Talk About Nagarjuna Tabu Controversy