20 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு!! 61 வயதில் 2ஆம் திருமணம் செய்யப்போகும் கோடிஸ்வரர் ஜெஃப் பெசோஸ்..
ஜெஃப் பெசோஸ்
உலகில் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் தான் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ். இந்த கோடையில் தன் காதலி லாரன் சான்ச்சேஸை திருமணம் செய்யவுள்ளார்.
இத்தாலி நாட்டிலுள்ள வெனிஸ் நகரில் உலகிலேயே மிகப்பெரிய படகான 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொரு எனும் படகில் இவரின் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெஃப் பெசோஸின் வருங்கால மனைவி லாரன், பாட்ரிக் ஒயிட்செல் என்ற அமெரிக்கத் தொழிலதிபரின் முன்னாள் மனைவியாம்.
2018ல் ஜெஃப் த்ன் மனைவியாக மெக்கென்ஸி ஸ்காட்டுடன் வாழும்போது ஜெஃப்புக்கும் லாரனுக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் பெரியளவில் சர்ச்சையாக ஜெஃப் தன் மனைவியை விவாகரத்து செய்தார்.
லாரனும் தன் கணவரை விவாகரத்து செய்து 2019ல் ஜெஃப்புடன் சேர்ந்து சுற்றத் தொடங்கினார். 2023ல் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கோடையில் இவர்களின் திருமணம் நடக்கவுள்ளது.