ரூ. 9,280 லட்சம் கோடி சொத்து..முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீட்டின் மாத மின் கட்டணம் இத்தனை லட்சமா?
முகேஷ் அம்பானி
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்க கூடியவர் தான் முகேஷ் அம்பானி. ரூ. 9280 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி, தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடிப்பார்.
அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது. அந்தவகையில், அம்பானி தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக இந்தியாவிலேயே முதல் புல்லட் ப்ரூஃப் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை 7.99 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கும் தகவல் வெளியானது.
அண்டிலியா
இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட அண்டிலியா வீட்டில் 600க்கும் மேற்பட்ட வேலையாட்கள் பணி செய்கிறார்கள். இந்நிலையில் அம்பானியின் அண்டிலியா வீட்டின் மின் உபயோகம் மாதத்திற்கு 6,37,240 யூனிட் பயன்படுத்தப்படுகிறதாம். அதற்கான மின் கட்டணம் ரூ. 70 லட்சத்திற்கும் மேல் என்று கூறப்படுகிறது.