ஹீரோயினுக்கு முக்கியத்துவம்!! என்னுடன் நடிக்க மறுத்த ஹீரோ!! நடிகை டாப்ஸி ஓபன் டாக்..

Taapsee Pannu Bollywood Indian Actress Tamil Actress Actress
By Jai Mar 19, 2026 03:00 PM GMT
Report

டாப்ஸி பன்னு

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் பிரபல ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார் நடிகை டாப்ஸி பன்னு. சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம்!! என்னுடன் நடிக்க மறுத்த ஹீரோ!! நடிகை டாப்ஸி ஓபன் டாக்.. | That Star Hero Rejected Me To Act Taapsee Reveals

மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி வரும் டாப்ஸி, ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்க பல நடிகர்கள் தயங்குவதாக கூறியிருக்கிறார்.

நடிக்க மறுத்த ஹீரோ

டாப்ஸி கூறுகையில், என்னுடைய ஒரு படத்திற்காக தயாரிப்பாளர்கள் முதலில் ஒரு பிரபல ஹீரோவை அணுகினார்கள். ஆனால் அந்த ஹீரோ, கதையில் ஹீரோயின் ரோல் முக்கியமாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அப்படத்தை நிராகரித்துவிட்டார்.

நான் முன்பு அந்த ஹீரோவுடன் பணியாற்றியிருந்தபோதும், அந்த ரோலின் நீளமும், முக்கியத்துவமும் காரணமாக அவர் பின்வாங்கியதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார். அப்படி கூறிய அந்த ஹீரோ யார் என்று பலரும் யூகித்து வருகிறார்கள்.