15 ஆயிரம் கோடி மதிப்புள்ள அண்டிலியா வீடு!! யாரும் பார்த்திராத உள்பக்க புகைப்படங்கள்..
முகேஷ் அம்பானி
உலகின் பணக்காரர்கள் லிஸ்ட்டில் ரூ.8.13 லட்சம் கோடி சொத்து மதிப்பு வைத்து 18வது இடத்தில் இருப்பவர் தான் முகேஷ் அம்பானி. பிரமாண்டத்திற்கு பேர் போன அம்பானி குடும்பம் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட அண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்கள்.
அண்டிலியா வீட்டினை பற்றி பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்டிலியா வீடு
4.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த வீட்டில், 600 ஊழியர்கள் முழு நேர வேலையாக பார்த்து வருகிறார்கள். 168 கார் பார்க்கிங் வசதி கொண்டதாக இருக்கிறது அண்டிலியா வீடு.
ஜிம் மற்றும் ஸ்பா வசதிகளுடன் வாழும் அம்பானி குடும்பத்தினருக்காக பால்ரூம் என்ற நிகழ்ச்சி அறையும் இருக்கிறது. நீச்சல் குளம் மற்றும் தனியாக வெப்பக்காலத்தை சமாளிக்க தனி பனி அறையும் உள்ளதாம்.
27 மாடி அடங்கிய அண்டிலியா வீட்டில் இன்னும் அறியப்படாத சில ஆடம்பர வசதிகளும் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.






