ரூ. 15,000 கோடி ஆண்டிலியா வீட்டுப் பணியாளர்கள் ஆள்தேர்வு எப்படி நடக்கும் தெரியுமா?
முகேஷ் அம்பானி
உலகில் பெரும் பணக்காரார்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் முகேஷ் அம்பானி. டாப் பணக்காரர்கள் பட்டியலில் 18வது இடத்தில் இருக்கும் அம்பானி ஆசியாவில் நம்பர் 1 பணக்காரராக இருந்து வருகிறார். முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு உலகிலேயே விலை மதிப்புமிக்க வீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

27 தளங்கள் கொண்ட ஆண்டிலியா வீடு 1,120 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ15 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆடம்பர வசதிகள் கொண்ட இந்த வீட்டில் 600- 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒரு ஊழியருக்கு ஆண்டு வருமானமான பல லட்சங்களை அள்ளிக் கொடுக்கிறார் அம்பானி.
6 இலக்க சம்பளம், இதர சலுகைலள் என்று அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிகராக சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி வீட்டின் ஊழியர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளாது. அதாவது, ஆண்டிலியா வீட்டில் வேலை செய்பவர்கள் அதிக திறன்மிக்கவராக இருக்க வேண்டும் என்று அம்பானி விரும்புவார். இதனால் கடுமையான கேள்விகள் அடங்கிய எழுத்து தேர்வு முதலில் நடைபெறும்.
ஆள்தேர்வு எப்படி
அதில் தேர்ச்சி பெற்றால் மட்டும்தான் நேர்முகத்தேர்வுக்கு செல்ல முடியுமாம். எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறார்களோ அதற்கேற்ற வகையில் திறன் தேர்வுகள் நடைபெறும். அதாவது, சமையலர் பணிக்கு விண்ணப்பித்தால் அவர், அதில் கைத்தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பாத்திரம் கழுவும் வேலைக்கு விண்ணப்பித்தால்கூட கடுமையான சரிபார்ப்பு மற்றும் திறன் தேர்வு நடந்த பின் தான் தேர்வு செய்யப்படுவார்கள். அம்பானி விட்டில் வேலை செய்பவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மட்டுமில்லாமல் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகையும் அளிக்கப்படுகிறதாம்.