குடிபோதையில் இருக்கும்போது வந்த ஏவிஎம் வாய்ப்பு!! மாஸ் ஹிட் கொடுத்த கவிஞர் வாலி

Tamil Cinema Tamil Producers Cinema Update
By Edward Dec 04, 2025 01:30 PM GMT
Report

கவிஞர் வாலி

தமிழ் சினிமாவில் வாலிபக் கலைஞர் என்று ரசிகர்கள் புகழப்பட்டவர் தான் வாலி. சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்தில் உச்சத்தில் இருந்த தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏவிஎம் தான். அந்நிறுவனத்திற்கு பாட்டெழுத வேண்டுமென்பது வாலியின் நீண்டநாள் ஆசையாக இருக்க, அந்த வாய்ப்பு பல வருடங்களாக வாலிக்கு கிடைக்கவில்லை.

குடிபோதையில் இருக்கும்போது வந்த ஏவிஎம் வாய்ப்பு!! மாஸ் ஹிட் கொடுத்த கவிஞர் வாலி | Vaali Masterpiece Song After Drinking Alcohol

பொதுவாக ஏவிஎம் படங்கள் என்றாலே கண்ணதாசன் தான் பாட்டெழுதுவார். அதனால் வாலிக்கு சினிமாவில் அறிமுகமான 5 அண்டுகளாகியும் ஏவிஎம் நிறுவனத்தின் வாய்ப்பு வரவில்லை.

ஒருநாள் எம் எஸ் வி-யின் ஸ்டூடியோவில் வேறொரு படத்திற்கு காலையில் பாடல் எழுதிய வாலிம் மதியம் என்ன படத்திற்கான ரெக்கார்டிங் என கேட்க, அவரோ ஏவிஎம் படத்திற்கான ரெக்கார்ட்டிங் இருக்கிறது என்று எம் எஸ் வி கூறியிருக்கிறார்.

குடிபோதையில் இருக்கும்போது வந்த ஏவிஎம் வாய்ப்பு!! மாஸ் ஹிட் கொடுத்த கவிஞர் வாலி | Vaali Masterpiece Song After Drinking Alcohol

ஏவிஎம் படமென்றால் நமக்கு வேலை இருக்காது என எண்ணிய வாலி வீட்டிற்கு கிளம்பிச் சென்றுள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் மதிய வேளையில் மூச்சு முட்ட குடித்துவிட்டு வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்துள்ளார்.

ஏவிஎம் வாய்ப்பு

அப்போது எம் எஸ் வி-யின் ஸ்டூடியோவுக்கு சென்ற ஏவிஎம் மெய்யப்ப செட்டியார், அவரை சந்தித்து பேச, எதர்ச்சியாக அங்கு வாலி எழுதிய தெய்வத் தாய் பட பாடல்களை எல்லாம் கேட்டுள்ளார்.

அப்பாடல் வரிகளை கேட்டு வியந்துபோன மெய்யப்ப ரெட்டியார், யார் எழுதிய பாடல்கள் இது? என்று கேட்க அதற்கு இது அனைத்தும் வாலி எழுதிய பாடல் என்று எம் எஸ் வி கூறியிருக்கிறார்.

அவரை தன் படத்திலும் பாடல் எழுதவைக்க முடிவெடுத்த மெய்யப்ப ரெட்டியார், தன் தயாரிப்பில் உருவாகும் சர்வர் சுந்தரம் படத்திற்காக அவசரமாக ஒரு பாடல் தேவைப்படுவதால், அந்த பாடலை எழுத்த வாலியை அழைக்கலாம் என்று முடிவெடுத்தார்.

குடிபோதையில் இருக்கும்போது வந்த ஏவிஎம் வாய்ப்பு!! மாஸ் ஹிட் கொடுத்த கவிஞர் வாலி | Vaali Masterpiece Song After Drinking Alcohol

குடிபோதை

வாலியை வரச்சொல்லுமாறு தன் உதவியாளர்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார். பின் வீட்டில் குடிபோதையில் இருந்த வாலியிடம் மெய்யப்ப ரெட்டியார் பாடல் எழுத அழைத்திருக்கும் விஷயத்தை அந்த நபர் சொன்னதும், திக்குமுக்காடிய வாலி, உடனடியாக குளித்துவிட்டு, குடிபோதையிலேயே பாடல் எழுத சென்றுள்ளார்.

அப்போது வாலியிடம் எம் எஸ் வி, சிச்சுவேஷன் சொல்ல, அந்த போதையில் வாலி எழுதினார். அந்த பாடல் தான் சர்வர் சுந்தரம் படத்தில் இடம்பெற்ற அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாடல். இப்படியொரு கவித்துவமான பாடலி வாலி குடிபோதையில் எழுதினார் என்று சொன்னால் யாரு தான் நம்பமாட்டார்கள்.