அஜித்துடன் செல்ஃபி எடுத்த மலேசிய ரசிகை கண்ணீர்விட்டு வீடியோ வைரல்..
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக்கொள்ள மலேசியா சென்றுள்ளார் அஜித்.

மலேசியாவில் நடிகர் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்தனர். அதில் மலேசிய ரசிகை ஒருவர் அஜித்துடன் செஃல்பி எடுத்துகொண்டது குறித்து அழுதபடி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மலேசிய ரசிகை
அதில், முதலில் நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணியபோது அஜித் சார் எண்ண திட்டிட்டாரு, ஆனால் அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செஃல்பி எடுத்து கொடுத்தார். என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சு.

அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிடுச்சு என்று அந்த ரசிகை கண்ணீர் விட்டபடி வீடியோவை பகிர்ந்துள்ளார். ரசிகையின் வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.