அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் பர்த்டே!! கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்..
அம்பானி மருமகள் ராதிகா
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 18வது இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் பிரமாண்டமான முறையில் பல ஆயிரம் கோடிகள் செலவில் திருமணத்தை நடத்தி முடித்தார்.
ஒரு மாதகாலமாக நடந்த இத்திருமண விழாவில் ராதிகா அணிந்த ஆடை அணிகலன்கள் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. திருமணத்திற்கு பின் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக ராதிகா தற்போது திகழ்ந்து வருகிறார்.
பர்த்டே
கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி ராதிகா மெர்ச்சண்ட் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவரின் பிறந்தநாளுக்கு நடிகை ஜான்வி கபூர், அனன்யா பாண்டே உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது ராதிகாவின் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.