தமன்னா உடலை வைத்து சர்ச்சை கருத்து!! 69 வயது நடிகரை விளாசும் நெட்டிசன்கள்..
தமன்னா
முன்னணி நாயகிகளில் ஒருவரான தமன்னா, தற்போது நடிப்பை தாண்டி நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சிறப்பு பாடல்களில் கிளாமர் நடனத்தில் தொடர்ந்து தமன்னாவை பார்த்து வருகிறோம்.
ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு இவர் நடனமாடியது உலகளவில் வைரலானது. இந்த பாடலில் நடனமாடுவதற்காக இவர் ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.
அண்மையில் வெளிவந்த பேட்ஸ் ஆஃப் பாலிவுட் வெப் தொடரில் நடனமாட ரூ. 6 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். இதையடுத்து பல படங்களில் நடனமாடி கோடிகளில் சம்பாதித்த தமன்னா, மில்க் மியூட்டி என்று புகழப்பட்டு வருகிறார்.
அன்னு கபூர்
இந்நிலையில் 69 வயதாகும் நடிகரும் 2 முறை தேசிய விருது வாங்கிய பாலிவுட் ஹீரோவுமான அன்னு கபூர், நடிகை தமன்னாவை பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சுபாங்கர் மிஸ்ராவின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில், தமன்னாவின் ஆஜ் கி ராத் பாடலின் ஒரு கிளிப் காட்டப்பட்டு அவரின் கருத்தை கேட்டுள்ளார்.
அதற்கு அன்னு கபூர், ஆபாசமான வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, அவளுக்கு என்ன ஒரு பால் போன்ற ஒரு உடல் என்று பேசியிருக்கிறார். இதனை பார்த்த பலரும் அவமரியாதையான கருத்தினை கூறியதை கண்டித்து வருகிறார்கள்.