அம்பானி - நீடா பள்ளியில் போடும் உணவு என்னென்ன தெரியுமா? நீங்களே பாருங்க...
முகேஷ் அம்பானி - நீடா
உலகமே வியந்து பார்க்கும்படியான தனது மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தி முடித்தார் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியினர். பல ஆயிரம் கோடி செலவில் நடந்த இத்திருமணத்திற்கு பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினர் திருபாய் அம்பானி இன்ஸ்டர்நேஷ்னல் ஸ்கூல் என்ற பள்ளியை நடத்தி வருகிறார்கள். மும்பையில் அமைந்துள்ள இப்பள்ளியில் பாலிவுட்டின் பல நட்சத்திரக் குழந்தைகளும் படிக்கிறார்கள். ஐஸ்வர்யா மகள் முதல் ஷாருக்கான் மகன் வரை இப்படியில் தான் படிக்கிறார்கள்.
பள்ளியில் போடும் உணவு
அனைத்து வசதிகளுடன் கூடிய இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு தினமும் வழங்கப்படுகிறது. பள்ளியின் உணவுப்பட்டியலை பிரபல சமையல்காரர் சஞ்சீவ் கபூர் என்பவர் தயாரித்துள்ளார். இது மிகவும் ஆரோக்கியமானதாகவும் எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் உள்ளதாம்.
குழந்தைகளுக்கு பருப்பு, காய்கறி, சப்பாத்தி போன்ற எளிய மற்றும் ஆரோக்கியமான உணவும் சாலட் உடன் வழங்கப்படுகிறது. காலை உணவும் வழங்கப்படுகிறது. அதில் மாணவர்களுக்கு பொஹா, இட்லி - தோசை, பழங்கள், உலர் பழங்கள் வழங்கப்படுகிறதாம்.