முன்னணி நடிகையுடன் டின்னர் சாப்பிட்ட ஏ.ஆர். ரஹ்மானின் மகன்.. யாருடன் பாருங்க

nayanthara a.r. rahman a.r. ameen
By Kathick Jan 07, 2022 08:40 PM GMT
Report

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து பல படங்களின் தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து உலகளவில் பிரபலமாகியுள்ளார்.

இவர் இசையில் தற்போது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவரின் மூத்த மகள் கதீஜாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன். இவரும் தற்போது இசைத்துறையில் பாடகராக வளர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன், பிரபல முன்னணி நடிகை நயன்தாராவுடன் டின்னர் சாப்பிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர். அமீன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..   

முன்னணி நடிகையுடன் டின்னர் சாப்பிட்ட ஏ.ஆர். ரஹ்மானின் மகன்.. யாருடன் பாருங்க | Ameen Dinner With Nayanthara