60 வயதில் 3வது திருமணம்!! கண்ணீருடன் வீட்டைவிட்டு கிளம்பிய அமீர் கான் மகள்..
அமீர் கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சொத்து வைத்திருக்கும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அமீர்கான். சூப்பர் ஸ்டார் ரஜினிகந்தின் கூலி படத்தில் நடித்து வரும் அமீர்கான் மார்ச் 14 ஆம் தேதி தன்னுடைய 60வது வயதை எட்டியுள்ளார்.
ஏற்கனவே ரீனா தத்தா, கிரண் ராவ் போன்றவர்களை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார் அமீர்கான். அதன்பின் சில வருடங்களாக தங்கல் படத்தில் நடித்த சனா ஷேக் என்பவருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
அவரை தொடர்ந்து 18 மாதங்களாக வேறொரு பெண்ணுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக செய்திகள் கசிந்தது. தன்னுடைய 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மூன்றாவது காதலியை அறிமுகப்படுத்தியிருந்தார்.
மகள் இரா கான்
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அப்பா அமீர் கானை சந்தித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி அவரது மகள் இரா கான், கண்கலங்கியபடி காரில் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டுதான் மகள் இரா கானுக்கு பிரமாண்ட முறையில் திருமணத்தை நடத்தி வைத்தார் அமீர் கான். தற்போது அவரது மகள் கண்ணீருடன் காரில் சென்ற விஷயம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தில் பிரச்சனையா? என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகிறார்கள்.