நடிகை பாவ்னிக்கு டார்ச்சர் கொடுக்கும் பிக்பாஸ் அமீர்! கண்டித்த விஜே பிரியங்கா..வைரல் வீடியோ

Bigg Boss Pavani Reddy
By Edward May 20, 2022 02:10 PM GMT
Edward

Edward

Report

பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 5 சீசன். எல்லா சீசன்களிலும் எதாவது காதல் சர்ச்சைக்கு பேர் போகும் ஜோடிகள் சிக்குவதுண்டு.

அந்தவகையில் சீசன் 5ல் நடிகை பாவ்னி மற்றும் அமீர் ஜோடி காதல் சர்ச்சையில் சிக்கினார். இருவரும் இரவில் பேசிக்கொள்வதும் முத்தம் கொடுப்பதுமான விஷயங்களும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகியது. பின் நிகழ்ச்சிக்கு பிறகு ஜோடியாக அவுட்டிங் செல்ஃபி என புகைப்படங்களை வெளியிட்டனர்.

சமீபத்தில் கூட பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார்கள். கடந்த எபிசோட்டில் விஜே பிரியங்கா இருவருக்கும் திருமணமா என்று கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு அமீர் ஆமாம் என்று பாவ்னி அதெல்லாம் இல்லை என்றும் கூறியிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே பாவ்னி நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று பல இடத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் 2 சீசனுக்காக பயிற்சி எடுக்கும் வீடியோவை பாவ்னி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடுமையாக பயிற்சி கொடுக்கும் அமீரால் பாவ்னி சற்று கஷ்டப்பட்டு கதறுவதை பார்த்த ரசிகர்கள் பார்த்துப்பா பாவம் அந்த பொண்ணு என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு விஜே பிரியங்கா தம்பி என்று கோபப்படும் எமோஜியை பகிர்ந்துள்ளார்.