உயிரோடு இருக்கும் புலியுடன் மல்லுகட்டிய பிரபல நடிகர்.. வைரல் போட்டோ

Fight Tiger Amitabh Bachchan
By Parthiban.A Jan 22, 2022 07:54 PM GMT
Report

சினிமாவில் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காரணத்தினால் எந்த விதமான காட்சியாக இருந்தாலும் அதை சிஜி மூலம் உருவாக்கி விடுகிறார்கள். முழுக்க முழுக்க அதே தொழில்நுட்பத்தில் உருவான அவதார் போன்ற படங்கள் உலக அளவில் வசூல் சாதனையும் செய்கின்றன.

ஆனால் அந்த காலத்தில் அனைத்து காட்சிகளையும் நேரடியாக தான் எடுக்கவேண்டும். அப்படி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உயிரோடு இருக்கும் புலி உடன் சண்டை போடுவது போன்ற காட்சியில் நடித்து இருக்கிறார்.

45 வருடங்களுக்கு முன்பு கூன் பசினா என்ற படத்தின் ஷூட்டிங்கில் உயிரோடு இருக்கும் புலியுடன் மல்லுக்கட்டிய போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த நேரத்தில் தான் அபிஷேக் பச்சன் பிறக்கும் செய்திக்காக காத்திருந்தேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.