அதெல்லாம் அவரவர் உரிமைங்க..விஜய் - திரிஷா விவகாரம்!! போட்டுடைத்த பிரபலம்...

Vijay Trisha Gossip Today
By Jai May 28, 2026 10:30 AM GMT
Report

விஜய் - திரிஷா

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வென்று தற்போது மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் சி ஜோசப் விஜய். பதவியேற்றபோது நடிகை திரிஷா வந்தது, முதல் வரிசை இருக்கையில் உட்கார்ந்தது மிகப்பெரியளவில் பேசுபொருளானது. அதேபோல் தேர்தலுக்கு முன் இருவரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதெல்லாம் அவரவர் உரிமைங்க..விஜய் - திரிஷா விவகாரம்!! போட்டுடைத்த பிரபலம்... | Amma Creations T Siva Breaks On Vijay Trisha

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அம்மா கிரியேஷன்ஸ் T சிவா அளித்த பேட்டியொன்றில் ஒருசில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

T சிவா

அதில், எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனை பாதிக்கத்தான் செய்யும். கரூர் சம்பவம் விஜய்யை, மாதக்கணக்கில் பாதித்தது. இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் நான் எத்தனையோ பேட்டிகள் கொடுத்திருக்கிறேன்.

அதிலெல்லாம் யாரையும் குறை சொல்லமாட்டேன். யாருடைய பெர்சனல் விஷயத்தையும் பேசமாட்டேன். அதெல்லாம் அவரவர் உரிமை, யாரும் அதை பேசக்கூடாது என்பது என்னுடைய கருத்து. அவரவர் பார்வை மாறத்தான் செய்யும். பொதுவான கோணத்தில் சிந்திக்க வேண்டாம்.

அதெல்லாம் அவரவர் உரிமைங்க..விஜய் - திரிஷா விவகாரம்!! போட்டுடைத்த பிரபலம்... | Amma Creations T Siva Breaks On Vijay Trisha

என்னுடைய வீட்டு நிகழ்ச்சிக்கு விஜய் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ரொம்ப ஆசைப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்தேன். இங்கேயும் பெரிய பிரச்சனைகள் எதுவும் வரக்கூடாது என்று நினைத்தேன். அவர் அதை எல்லாம் கண்டுக்கொள்ளவில்லை. சிம்பிளாக வந்துவிட்டு சென்றார். அவர் நினைத்தால் செய்து காட்டுவார். அது அவருடைய மைண்ட் செட்.

கோட் படத்தில் அமைந்த எல்லாம் உண்மையிலே நடந்தது ஒரு அசரீரி மாதிரித்தான். இந்தமாதிரி ஐடியாக்களை எல்லாம் வெங்கட் பிரபு நிறைய கொடுப்பார். விஜய் அதையும் ரசிக்கத்தான் செய்திருக்கிறார். விஜய் தேர்தலில் வென்றதன் மூலம் எல்லா துறைகளும் சுந்திரமாக செயல்படலாம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறேன் என்று சிவா தெரிவித்துள்ளார்.