பட வாய்ப்பு வேணும்ல, அதுக்கெல்லாம் யோசிச்சா நடிக்க முடியுமா!! ஓப்பனாக கூறிய அம்மு அபிராமி..
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த படம் 96. இப்படத்தில் குட்டி ஜானுவாக அம்மு அபிராமி நடித்திருப்பார்.
தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி அதன்பின் அசுரன், யானை உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வரவேற்பை பெற்றார்.
அதன்பின் தெலுங்கில் கிளாமர் ரோலில் நடித்தும் கையில் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் நீங்கள் நடிக்கும் சில படங்களில் உங்கள் ரோல் இறந்துவிடுவது போல் இருக்கும் காட்சி இருக்கும்.
அதற்கு உங்கள் பார்வை என்ன என்று கேட்டதற்கு, வேதனையாக தான் இருக்கும். என்னை இந்த அளவிற்கு கவனிக்கும் போது ஜாலி தான்.
என் ரோல் கிளைமேக்ஸ் வரை இருக்குமா இல்லையா என்று யோசித்தால் படங்களில் நடிக்க முடியுமா. பட வாய்ப்பு வேணும்ல என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
