திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நடிகை எமி ஜாக்சன்.. இப்போது வேறொருவருடன் புதிய காதல்
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தின் தொடர்ந்து விக்ரம், விஜய், ரஜினிகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.
ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வந்த நடிகை எமி ஜாக்சன், தீடீரென George Panayiotou என்பவருடன் காதலில் மயங்கினார். திருமணம் ஆகாமல், Andreas Jax Panayiotou எனும் அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் எமி ஜாக்சன்.
இந்நிலையில், தீடீரென திருமணம் ஆகாமல் வாழ்ந்து வந்த George Panayiotou-வுடன், எமி ஜாக்சனுக்கு காதல் முறிவு ஏற்பட்டுள்ளதாம். இதன்பின், தற்போது பிரபல நடிகர் Ed Westwick என்பவரை டேட்டிங் செய்து காதலித்து வருகிறார் நடிகை எமி ஜாக்சன்.
திருமணம் ஆகாமல், குழந்தை பெற்று, தற்போது முதல் காதலருடன் முறிவு ஏற்பட்டு, புதிய காதலருடன் எமி ஜாக்சன் நெருக்கமாக இருந்த வருவது, திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.