படவாய்ப்பில்லை ! மீண்டும் சீரியலில் ரீஎண்ட்ரி கொடுக்கும் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு..

serial television anandbabu muthazhagu
By Edward Nov 15, 2021 11:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் நடிகர் நாகேஷ் மகனாக தங்கைக்கோர் கீதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகர் ஆனந்த் பாபு. இதையடுத்து சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் ஹீரோவாக பாடும் வானம்பாடி படத்தின் மூலம் கதாநாயகனாகி பின் அடுத்துடுத்த படங்களில் நடித்தார்.

1986ல் சாந்தி என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார். இதையடுத்து படங்களில் கவனம் செலுத்தாமல் குடிக்கு அடிமையாகினார். அதிலிருந்து மீண்டு வந்த ஆனந்த் பாபு 2009ல் ஆதவன் படத்தில் நடிக்க ரீஎண்ட்ரி கொடுத்தார்.

அப்பா கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆனந்தபாபு 2017ல் சின்னத்ஹ்டிர பக்கம் சென்று மெளனராகம் சீரியலில் வில்லனாக நடித்தார். கடந்த ஆண்டு அந்த சீரியலின் முதல் பாகம் முடிந்த நிலையில் ஒரு வ்ருடங்களாக வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியின் முத்தழகு என்ற சீரியலில் நடித்துள்ளார். கிராமத்து கதைகளத்துடன் இன்று ஆரம்பிக்கவுள்ளது இந்த சீரியல்.