ஐட்டம் சாங் ஷூட்..அடுத்த நாள் மரணம்!! சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு காரணம் இதுதான்!! ஆனந்த் ராஜ்..
சில்க் ஸ்மிதா தற்கொலை
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கிளாமர் குயினாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. சிறு வயதிலேயே தற்கொலை செய்து இறந்த சில்க் ஸ்மிதா பற்றி பலரும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி வருகிறார்கள்.

அந்தவகையில், நடிகை ஆனந்த் ராஜ் அளித்த பேட்டியொன்றில், சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்று பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் ராஜ்
அந்த பேட்டியில், சில்க் ஸ்மிதா எனக்கு நல்ல தோழி. அவங்க என்கூட நிறைய படம் நடிச்சி இருக்காங்க. அவங்க இறக்கிறதுக்கு ஒருநாள் முன்னாடி எனக்கும் அவங்களுக்கும் ஒரு ஐட்டம் சாங் ஷூட் இருந்துச்சி. அடுத்தநாள் அவங்க இறந்துட்டாங்கன்னு சொன்னதும் ஷாக்காகிவிட்டேன்.

அவங்களோட அந்த முடிவுக்கு காரணமே மன அழுத்தம் தான். அவங்களுக்குள்ள அவ்ளோ வலி இருந்திச்சி. அவங்க இருந்து இருந்தால் இன்று வரை நடிச்சிட்டு இருப்பாங்க, சில்க் ஸ்மிதா சரித்திரைத்தை இன்னொரு நடிகை ஈடு செய்ய முடியாது என்று ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.