ஒரு நைட்டுக்கு எவ்வளவுன்னு கேக்குறாங்க..அப்படிப்பட்ட பெண் கிடையாது!! நடிகை அனங்ஷா பிஸ்வாஸ்..

Bollywood Indian Actress Actress
By Jai Aug 27, 2026 03:30 AM GMT
Report

அனங்ஷா பிஸ்வாஸ்

இயக்குநர் குர்மீத் சிங் இயக்கத்தில் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவ்யேந்து. ஜதேந்திர குமார், ரவி கிஷன், அபிஷேக் பானர்ஜி, ரசிகா துகல், ஸ்வேதா திரிபாதி, ஸ்ரேயா பில்கோன்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் தான் மிர்சாபூர்.

ஒரு நைட்டுக்கு எவ்வளவுன்னு கேக்குறாங்க..அப்படிப்பட்ட பெண் கிடையாது!! நடிகை அனங்ஷா பிஸ்வாஸ்.. | Anangsha Biswas Opens Up About Harassment

இப்படத்தில் சரினா என்ற முக்கிய ரோலில் நடித்துள்ளார் பிரபல நடிகை அனங்ஷா பிஸ்வாஸ். அவர் சமீபத்தில் சோசியல் மீடியாக்களில் வரும் ஆபாச குறுஞ்செய்திகள் குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில், சினிமாவில் ஒரு நடிகை எப்படி நடிக்கிறாரோ, நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படித்தான் இருப்பார் என்ற தவறான எண்ணத்தால் தொடர்ந்து சிலர் எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். சிலர் சோசியல் மீடியாக்களில், ஒரு நைட்டுக்கு எவ்வளவு? என்றெல்லாம் கேட்டு கேவலமாக மெசேஜ் அனுப்புகிறார்கள்.

ஒரு நைட்டுக்கு எவ்வளவுன்னு கேக்குறாங்க..அப்படிப்பட்ட பெண் கிடையாது!! நடிகை அனங்ஷா பிஸ்வாஸ்.. | Anangsha Biswas Opens Up About Harassment

அதைப்படிக்கும்போது எனக்கு பெரிய மன வேதனையாக இருக்கும். நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது. சினிமா என்பது வேறு, நிஜ வாழ்க்கை என்பது வேறு, திரையில் காட்டப்படுவது வெறும் கதாபாத்திரம் மட்டும். அது அந்தப் படத்தோடு முடிந்துவிடும்.

அதற்காக நிஜ வாழ்க்கையிலும் ஒருவரால் அப்படியே வாழ முடியுமா? சினிமாவில் கவர்ச்சிக்காகவோ, விலைமாதாகவோ நடித்துவிட்டால், நிஜ வாழ்க்கையிலும் அப்பெண் அப்படித்தான் இருப்பார் என்று நீங்களாகவே எப்படி முடிவு செய்து கொள்கிறீர்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.