தங்க நிறத்தில் ஆடம்பர கார் வாங்கியுள்ள ஆனந்த் அம்பானி.. விலை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
உலக பணக்காரர்களில் ஒருவர் அம்பானி. இவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் செய்யும் விஷயம் எதுவாக இருந்தாலும் அது பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். ஆனந்த் அம்பானியின் திருமணமே ரூ. 5000 கோடி செலவில் நடந்ததாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வாட்ச் விலை, கார் விலை, அவர்கள் குடியிருக்கும் பங்களாவின் விலை குறித்தெல்லாம் செய்திகள் இதுவரை வெளியாகியுள்ளன.

அந்த வகையில், ஆனந்த் அம்பானியின் புதிய சொகுசு கார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்டால் கண்டிப்பாக நீங்களே ஷாக்காகிவிடுவீர்கள். ஆனந்த் அம்பானி சமீபத்தில் சுமார் ரூ. 11 கோடி மதிப்புள்ள ஆடம்பர காரை வாங்கியுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த காரில் தங்க நிற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் Bulletproof மற்றும் 800HP திறன் உள்ள டேங்க் என பல சிறப்பு அம்சங்களை இந்த கார் கொண்டுள்ளது.
