ரூ.3 லட்சம் சொத்து மதிப்பு!! 250 கோழிகளை மீட்ட அம்பானி மகன் ஆனந்த் அம்பானி..
ஆனந்த் அம்பானி
2025 ஏப்ரல் 10 ஆம் தேதியோடு தன்னுடைய 30வது பிறந்தநாளை முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி கொண்டாடவுள்ளார். அதற்காக குஜராத்தின் துவாரகாவிலுள்ள கோவிலுக்கு நடந்தே சென்று சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
இதற்காக தினமும் இரவு சுமார் 10 கிமீ வீதம் குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து புறப்பட்டு துவாரகாவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது வரை சுமார் 60 கிமீ தூரத்தை நடந்துவிட்டார். இதனிடையே ஆனந்த் அம்பானி நடந்து செல்லும் வழியிலுள்ள முக்கிய கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்.
சாலையில் நடந்து செல்லும் போது அவருக்கு அச்சுறுத்தல் ஏதும் ஏற்படாமலிருக்க அவருக்கு பாதுகாப்பு பணியில் Z-பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக உள்ளூர் காவல் துறையினரும் அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.
250 கோழி
இந்நிலையில் போகும் வழியில் இறைச்சிக்காக 250 கோழிகளை ஒரு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டது. அதையறிந்த ஆனந்த் அம்பானி வண்டியை நிறுத்தி, வண்டி உரிமையாளரிடம் பேசி கோழிகளை விடுக்கவேண்டும் என்றும் அதற்காக இரு மடங்கு தொகையை கொடுப்பதாகவும் கூறி கோழிகளை மீட்டுள்ளார்.
அந்த கோழிகளை மீட்டு தன் வன உயிரின புணர் வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் ஆனந்த் அம்பானி.
अनंत अंबानी की ये वीडियो आपका दिल जीत लेगी।
— Sagar Kumar “Sudarshan News” (@KumaarSaagar) April 1, 2025
जामनगर से द्वारिका जाते वक्त अनंत को एक टेम्पो के अंदर मुर्ग़े मुर्गियाँ दिख गई जो कटने के लिए जा रही थी।
अनंत अंबानी ने अपने लोगों को बोला इसके मालिक को इनके पैसे दे दो,और इनको अब हम पालेंगे।❤️🚩❤️#Anantambani #NitaAmbani… pic.twitter.com/nLOWDsGGBN