ஒரு வாட்ச் இத்தனை கோடியா!! அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரம் பற்றிய ரகசியம்..
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியினர் கடந்த ஜூலை மாதம் தனது மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தனர்.
அதிலும் அம்பானியின் மருமகள் ராதிகா அணிந்த ஆடை அணிகலன்கள் அனைத்தும் வியக்கும்படியாக இருந்தது. சுமார் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் நடந்த இத்திருமணத்தில் அம்பானி குடும்பத்தினர் விலையுயர்ந்த ஆடை அணிகள் அணிந்து மிரளவைத்தனர்.
ரஜினிகாந்த், அட்லீ ப்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஆனந்த் அம்பானி - ராதிகா தம்பதியினர் 2025 புத்தாண்டையும் சிறப்பாக கொண்டாடினர்.
கைக்கடிகாரம்
இந்நிலையில், திருமணத்தின் போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம் தான் தற்போது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனந்த் அம்பானி அணிந்த கைக்கடிக்காரத்தின் மதிப்பு சுமார் ரூ. 22 கோடியாம். Richard Mille RM 52-04 Skull Blue Sapphire என்ற வாட்ச் தான் அது. 22 கோடி மதிப்புள்ள இந்த வாட்ச் உலகிலேயே இதுவரை தயாரிக்கப்பட்டது மட்டும் 3 தானாம்.